I P L- 2020 ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசில்வுட் உட்பட மூன்று முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் வாங்கியுள்ளது .
இதையடுத்து பந்து விச்சாளருக்கான ஏலத்தின் போது 1 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணியக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான குல்டர் நைலை அணியில் எடுக்க சென்னை மற்றும் மும்பை அணி தேர்வாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால் இறுதியில் மும்பை அணியே 8 கோடி ரூபாய்க்கு குல்டர் நைலை ஏலத்தில் வாங்கியுள்ளனர். அதேபோல் மீண்டும் 1 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை ஏலம் எடுக்க பஞ்சாப் -சென்னை தேர்வாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் இந்த முறை சென்னை அணி 6.75 கோடி ரூபாய்க்கு பியூஸ் சாவ்லாவை தக்க வைத்தது.
இந்நிலையில்,முதல் பாதியின் இறுதிகட்டத்தில் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய் விலையிலே ஏலம் எடுத்தது. இதன் மூலம் சாம் கரன், பியூஸ் சாவ்லா மற்றும் ஜோஷ் ஹாசில்வுட் ஆகிய மூன்று வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளன . இதன் மூலம் சென்னை அணியின் வீரர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னை அணிக்கு இன்னும் 35 லட்ச ரூபாய் மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.