மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி என்னும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 40 பேர் காயமடைந்து இருக்கின்றனர். அவர்களில் 20 பேர் உத்திரப்பிரதேசத்தில் பிரக்யா ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என ரேவா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் நவ்னீத் பசின் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கின்றனர் தொடர்ந்து விபத்து நடைபெற்றதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து இருக்கிறது மேலும் இந்த துயர சம்பவத்திற்கு உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய பிரதேச முதல் மந்திரியிடம் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை பற்றி பேசி இருக்கின்றேன் விபத்தில் உயிரிழந்த உத்திர பிரதேச குடியிருப்பு வாசிகளின் உடல்களை திருப்பிக் கொண்டு வருவது பற்றியும் பேசி இருக்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.