Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பஸ்சை நிறுத்துவியா மாட்டியா”…. அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய வாலிபரால் பரபரப்பு….!!!!

அரசு பேருந்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து திருவையாறு வரை செல்லும் அரசு பேருந்து கடந்த 9 ஆம் தேதி சுவாமி மலையை அடுத்துள்ள மேல கொட்டையூர் வழியாக சென்றுள்ளது. இந்த பேருந்தில் மேலக்கோட்டையூரை சேர்ந்த அருள் பாண்டியன் என்பவர் பயணித்துள்ளார். அவர் மேலக்கோட்டையூரில் பேருந்தை நிறுத்த வேண்டும் என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் கண்டக்டர் இந்த பஸ் மேல கோட்டையூரில் நிற்காது எனக் கூறி உள்ளார். இதனால் அருள் பாண்டியன் ஆத்திரம் அடைந்த  கண்டக்டர் குமாரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்டக்டர் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அருள் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |