Categories
Uncategorized தேசிய செய்திகள்

பஸ்ஸில் சில்மிஷம்!…. போதை ஆசாமியை அடித்து உதைத்த சிங்கப்பெண்…. வைரல்….!!!!

கேரள மாநிலம் வயநாட்டில் படிஞ்ஞாறுதுறை பகுதியிலிருந்து வேங்கபள்ளி பகுதிக்கு  போகும் தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது அப்பேருந்து கிளம்பும் சமயத்தில் சந்தியாவின் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒரு போதை ஆசாமி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும்போது அவர் சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தியா பேருந்து நடத்துநரிடம் தெரிவிக்க பேருந்தை நிறுத்தி அவனை இறக்கிவிட்டுள்ளனர். அவ்வாறு இறக்கிவிட்ட பிறகும் அடங்காத அவன் சாலையில் படுத்தபடி அப்பெண்ணை நோக்கி சில ஆபாசசைகைகளை காட்டியுள்ளான். இதனால் ஆவேசமடைந்த சந்தியா தனிஆளாக நடுரோட்டில் வைத்து அவனை ஏறி மிதித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |