Categories
உலக செய்திகள்

பஸ்ஸை மறித்து துப்பாக்கி சூடு…. ஒருவரின் கொடூர எண்ணம்…. பறிபோன 34 உயிர்…!!

மர்ம நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எத்தியோப்பியா நாட்டில் உள்ள டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கும், அரசுப் படையினருக்கும் இடையே தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிளர்ச்சிப் படையினரை சார்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் எத்தியோப்பிய அரசு படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து இந்த உள்நாட்டுப் போரின் தீவிரம் தற்போது அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சம்பவத்தன்று பனிஷங்குள் – குமுஸ் மாகாணத்தில் உள்ள மிடகேல் என்ற பகுதியில் பேருந்து ஒன்று 35க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த பேருந்தை வழி மறித்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பேருந்தில் இருந்த பயணிகளை தாறுமாறாக குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அலறியடித்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் இந்தக் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் பலியாகியுள்ளதாக எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர் யார்? என்று பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்நாட்டுப்போர் நடைபெற்று வருவதால் கிளர்ச்சிப் படையினரைச் சார்ந்த யாரேனும் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி இருப்பார்களா?  என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |