Categories
மாவட்ட செய்திகள்

பஸ்ஸ்டாண்டை பதறவைத்த பள்ளி மாணவிகள்…. என்ன காரணமாக இருக்கும்?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு மற்றும் ஜன்னல்களை பிடித்தவாறு பயணிக்கும் வீடியோக்கள் மற்றும் ரயிலில் சாகசம் சம்பவங்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அதனைப்போலவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் ஆவடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது மாணவிகள் இரு குழுக்களாகப் பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவிகளின் சண்டையை பொதுமக்கள் தடுத்து நிறுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |