Categories
மாநில செய்திகள்

பஸ்ஸ நிறுத்தலைனா வெட்டுதான்….. அடாவடி செய்த மர்மநபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!

கும்பகோணத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் தாக்கிய நபரின் சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் வழியில் நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்தார். மேலும் ஸ்டியரிங்கை திருப்பி வம்பில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல் பேருந்து சாவியையும் பிடுங்கியுள்ளார். தொடர்ந்து தனது நண்பர்களை வர வைத்த அந்த நபர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

https://twitter.com/senthil4200/status/1512259452648316931

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பார்ப்போரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |