Categories
தேசிய செய்திகள்

பஸ் டிக்கெட் முன்பதிவு செய்தா… நிறைய தள்ளுபடி உண்டு… வெளியான அறிவிப்பு..!!

வாயு வஜ்ரா பேருந்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல பகுதிகளில் சர்வதேச விமானங்களுக்கு செல்வதற்கு வாயு வஜ்ரா என்று ஏசி பேருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை நகரின் பல்வேறு வழித்தடங்களில் பயன்படுகின்றது. இதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய www.ksrtc.in என்ற இணையதளத்திலும் கேஎஸ்ஆர்டிசி என்ற மொபைல் ஆப் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். பேருந்தில் பயணிக்கும் போது தங்களது டிக்கெட்டுகளை இ டிக்கெட் அல்லது செல்போனில் உள்ள எஸ்எம்எஸ் போன்றவற்றை நடத்துனரிடம் காட்டினால் போதும்.

மேலும் தனது அடையாள அட்டையை காட்டவும் வேண்டும். பல்வேறு பகுதியிலிருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு 164 முறையும், விமான நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 171 முறையும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாயு வஜ்ரா பேருந்துகளில் பயணிக்க ஒரே நேரத்தில் நான்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் ஐந்து சதவீதம் தள்ளுபடியும், மேலும் பயணம் முடிந்த பின் திரும்பி வரும்போது டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடியும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |