பஸ் டிரைவரை கொலை செய்த வழக்கில் கைதான ஐடி நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.
சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் அருகே இருக்கும் பாலவாடியில் வசித்து வந்த பொன் குமார் என்பவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சம்மட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸார் அதே ஊரில் வசித்து வரும் குமார் என்பவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வகுமார் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் செல்வகுமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, நான் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் பாலவாடிக்கு வரும் பொழுது எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது வீட்டின் அருகே வசிக்கும் என் மனைவியின் உறவினரான பொன்குமார் வந்து தட்டிக் கேட்பார்.
இவர் ஒவ்வொரு முறையும் எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சனை ஏற்படும் போது தலையிட்டு வந்தது எனக்கு பிடிக்காததால் அவரை அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடிபோதையில் நானும் குமாரும் சென்று தூங்கிக்கொண்டிருந்த பொன்குமாரை குழாயால் தலையில் அடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டோம். அவர் இறந்தது எனக்கு தெரியாது. பொன்குமார் காலையில் என்னிடம் வீட்டில் வந்து சண்டையிடுவார் என்பதற்காக நான் அங்கிருந்து வெளியே சென்ற நிலையில் தற்பொழுது போலீஸிடம் மாட்டிக் கொண்டேன் என கூறியுள்ளார்.