இந்தாண்டு இறுதிக்குள் பஸ்சில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
அரசு பேருந்துகளில் வழக்கமான டிக்கெட்டிற்கு பதில் இ-டிக்கெட் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின் ஜிபே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் மொபைல் ஸ்கேனிங் செய்து பஸ்சில் இ-டிக்கெட் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.