தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக விஜய் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வாரிசு படம் உருவாகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை அழைத்து விஜய் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது.
இச்சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் கூறியதாவது, “தங்களது கிராமம் மிக சிறியது ஆகும். எங்களுடைய கிராமத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. அத்துடன் தெரு வசதியும் கிடையாது. எனினும் எங்களின் கிராமத்துக்கு நடிகர் விஜய் வந்தார். சிறிதுநேரம் எங்களுடன் இருந்து விட்டு தான் சென்றார். அதுமட்டுமின்றி எங்கள் ஊருக்கு அன்னதானம் எல்லாம் செய்திருக்கிறார்.
#Vijay | விஜய் எங்கள் கிராமத்திற்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார்.
அவர் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறோம்.
சிவகூடல் கிராம ரசிகர் நெகிழ்ச்சி. #VijayMakkalIyyakkam | #VijayFansMeet pic.twitter.com/KwOyhEY185
— Senthilraja R (@SenthilraajaR) November 20, 2022
அத்துடன் எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் அண்ணாவின் படங்களுடைய பெயர்களைதான் வைக்கிறோம். அவ்வாறு அவர் மேல் வெறித்தனமான ரசிகர்களாக உள்ளோம். எங்கள் ஊருக்காக விஜய் பெருமாள் கோவில் கட்டிக்கொடுத்திருக்கிறார். முதன் முதலாக விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தது எங்கள் கிராமத்தில் தான்” என அந்த ரசிகர் கூறியுள்ளார்.