செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கழகத்தினுடைய நிறுவனத்தலைவர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய உண்மையான தொண்டனாக பக்தனாக… 1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் முதலில் எம்ஜிஆர் மன்றத்தை ஆரம்பித்தவன் நான் தான். அதனுடைய அடிப்படையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்காக அன்று நான் சபதம் ஏற்கிறேன். என்னுடைய 17வது வயதில் சபதமேற்றேன்.
என்னால் வாழ்நாள் முழுவதும் புரட்சித்தலைவர் உடைய அன்புத் தொண்டன் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று…. அந்த அடிப்படையில் 42 ஆண்டுகள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அடியெடுத்து வைத்து…. 68 ஆண்டுகள் பொது சேவையில் என்னை ஈடுபடுத்தி, முதன்முதலாக 1953ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கிளை கழகத்தினுடைய வட்ட செயலாளராக நான் பணியாற்றினேன்.
அதைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கிய போது, அன்றைய தினம் நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் (எக்ஸ்பிரஸ் டியூட்டி) தடம் எண் 511 நாகர்கோவில் to திருச்சி பேருந்தை ஓட்டி வந்தேன். 26 பயணிகள் அதில் பயணித்தார்கள். 2 பயணிகள் மேலூர் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அந்த இரண்டு பேரை இருக்கின்ற நேரத்தில் மேலூர் பேருந்து நிலையத்தில் அங்கு மிக அதிகமான கூட்டம்.
நான் உடனே ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவரை அழைத்துக் கேட்டேன்… என்ன இவ்வளவு கூட்டமாக இருக்கு என்று ? திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன், அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் ஓட்டுநராக நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு, அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன் என அக்கால நினைவுகளை பகிர்ந்தார்.