பாகற்காய் மிகவும் கசப்பான காய்கறிகளில் ஒன்று. இதை நாம் கசப்பாக இல்லாமல் எப்படி சமைப்பது என்பதை பற்றி தொகுப்பில் நாம் பார்ப்போம்.
கசப்பான காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த பாகற்காய், நோயைத் தடுக்கும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் என பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இதில் உள்ள வைட்டமின் சி ரசாயன சேர்மங்கள் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன, வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுவதால், சரும ஆரோக்கியத்தையும் சரியான பார்வையையும் தருகிறது. மேலும் இது உயிரணு வளர்ச்சி மற்றும் டி. என். ஏ உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு இவை நோய் தடுப்பு, எலும்பு சிதைவு மற்றும் காயம் குணப்படுத்துதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கசப்பாக இருப்பதால் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் பாகற்காயை உணவில் சேர்ப்பதை பலர் தவிர்த்து வருகின்றனர். பாகற்காயை நன்றாக வறுத்து, மசாலாப் பொருட்களுடன் கலந்து சிற்றுண்டியாக சாப்பிடலாம். தயிர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சேர்த்து வறுத்த சுண்டைக்காய் போன்று தயாரிக்கலாம். மேலும் மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து பாகற்காய் சாப்பிடலாம். ஆகவே வழக்கமாக சமைக்காமல் மேற்கண்ட மாதிரிகளில் சமைத்த பாகற்காயை அனைவரும் உண்ணலாம்.