பிரபல நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையில் சர்வதேச மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தரவரிசையில் பாகிஸ்தான் 170 நாடுகளில் 167 -வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைக்கான கண்காணிப்பகம் தெரிவித்தது. இந்த நிலையில் அரசு சாரா அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தானில் மட்டும் 2 ஆயிரத்தி 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர். இது பற்றி அந்த நாட்டில் இருந்து வெளிவரும் தீ நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.
இதுவே அந்த நாட்டின் மனித உரிமைகள் இருண்ட சூழலை எடுத்து உரைக்கிறது. இதற்கான தரவுகளை 79 செய்தி நிறுவனங்கள் சேகரித்துள்ளது. அதில் பெரும்பான்மையான வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்குகள் தான். இந்த நிலையில் 14 சிறுவர்களும், 1, 207 சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்றுள்ளனர். அதில் 298 பேர் சிறுவர்கள், 243 பேர் சிறுமிகள் ஆகும். இந்நிலையில் நகரப் பகுதியில் 52 சதவீத வழக்குகளும், கிராம பகுதியில் 48 சதவீத வழக்குகளும் பதிவாகியுள்ளது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.