Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் புது சுகாதார அமைச்சர் நியமனம்…. எழுந்தது கடும் விமர்சனம்….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் வருடம் முதல் பிரதமராக இருந்து வந்த இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் 34 பேரை கொண்ட புது மந்திரி சபை நேற்று பதவியேற்றது. இதில் மந்திரிகளின் பதவியேற்பு விழாவானது நேற்று முன்தினமே நடைபெற இருந்த நிலையில் அதிபர் ஆரிப் அல்வி மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.
அதன்பின் பாகிஸ்தான் நாடாளுமன்றம் செனட் சபையின் தலைவர் சாதிக் சஞ்சராணி, நேற்று 31 மந்திரிகள் மற்றும் 3 இணை மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவற்றில் 34 மந்திரிகளில் குறைந்தது 20 நபர்கள் புதுமுகங்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான சூழ்நிலையில், அவர் புது மந்திரி சபையில் இடம்பெறவில்லை. முன்பாக புது உள்துறை அமைச்சராக ராணா சனாவுல்லா நியமிக்கப்பட்டார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி காலியாகவுள்ள நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சராக ஹினா ரப்பானி கர் பதவியேற்றார். இந்த நிலையில் புது சுகாதார அமைச்சராக அந்நாட்டு மக்கள்கட்சி அப்துல் காதர்படேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நியமனம் கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. இதில் அப்துல் காதர் மீது நில பேரம், மின்சார திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அப்துல் காதர் படேலுக்கு ஜாமின் வழங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |