Categories
Uncategorized

பாகிஸ்தானின் மிருகக்காட்சி சாலையில் சரியாக உணவு வழங்கபடாமல் அவல நிலையில் விலங்குகள்…. எலும்பும் தோலுமாக சிங்கத்தின் வைரல் புகைப்படம்….!!

பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படாததால் சிங்கமொன்று எலும்பும் தோலுமாக காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானின் கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படாததால் சிங்கம் ஒன்று எலும்பும் தோலுமாக உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரான அஜ்மத் மெஹபூப் என்பவருக்கு கடந்த பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் பணம் வழங்கப்படாததால் அவர் விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்வதை நிறுத்திவிட்டார்.

ஆனால் தற்போது பணம் வழங்கப்பட்டதாகவும் இதனால் விலங்குகளுக்கு உணவுகள் அளிப்பதாகவும் மெஹபூப் கூறியுள்ளார். தொடர்ந்து மீதமுள்ள தொகையையும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அளித்து விடுவதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷன் மிருகக்காட்சிசாலை அதிகாரி அலி ஹசன் சாஜித் கூறுகையில், இந்த புகைப்படம் மிகவும் பழமையான புகைப்படம் எனவும் நிர்வாகத்தின் பெயரை தடுப்பதற்காக இவ்வாறு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |