Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொற்றின் தாக்கம்… ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்…. புதிய அமைச்சர் பதவி ஏற்பு….!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாகிஸ்தான் நாட்டில்  சுகாதார துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,80,000ஐ கடந்து போய் கொண்டிருக்கிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தானின் சுகாதாரத்துறை அமைப்பின் மந்திரியாக இருந்த ஜாபர் மிர்சா கடந்த புதன்கிழமை அன்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அதன்பின் பாகிஸ்தான் நாட்டின் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக டாக்டர் பைசல் சுல்தான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் நியமித்தார். மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான ஆலோசகர் மற்றும் டாக்டரான பைசல் சுல்தான் கடந்த 1987-ம் வருடம் நாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, சர்வதேச மருத்துவம் மற்றும் தொற்று நோய் சிகிச்சை பிரிவில் 2 முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் 2 ஆண்டிற்குள் 3 முறை சுகாதார துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |