Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அவலம்… எரிபொருள் தட்டுப்பாடு… மின்சாரம் துண்டிப்பு…!!!!!

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்தின்  காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் அங்கு நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தானில் நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயுவு வினியோகித்து வரும் பல ஏற்றுமதியாளர்கள் கடந்த சில மாதங்களாக எரிவாயு ஏற்றுமதி ரத்து செய்திருக்கின்றனர். இதன் காரணமாக சந்தைகளில் புதிதாக ஏரிவாயு  வாங்க அந்த நாட்டு அரசு 6 டென்டர்களை  வெளியிட்டிருக்கிறது.  ஆனால் அது முழுமையாக வழங்கப்பட்டால்   அரசாங்கத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவாகும். மேலும் ஏற்கனவே நிலவும் கடுமையான பொருளாதார சூழலில் மின்வெட்டு பிரச்சினை மேலும் சிக்கலை அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் புதிய அரசின் கீழ் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஷெரீப் இன்னும் மின்துறை மந்திரியாக யாரையும் நியமனம் செய்யவில்லை. பாகிஸ்தான் ஒப்பீட்டளவில் ஏழ்மையான நாடாகும்.  மேலும் இது எரிசக்தி இறக்குமதியை அதிகம் சார்ந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பால், நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிஃப்தா இஸ்மாயில் வெளியிட்ட டுவிட்டர் பதிவின்படி,  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 3,500 மெகாவாட் மதிப்புள்ள மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் எரிபொருள் விநியோக பற்றாக்குறையை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால் எரிபொருள் வாங்க பாகிஸ்தான் போராடி கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தனது மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளாக, நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயுவை வெளிநாடுகளில் இருந்து வாங்க முடியாத சூழ்நிலை  நிலவுகிறது.

Categories

Tech |