பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போதை பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினால் சுடப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லை பகுதியான கலாம் டோகர் எனும் பகுதியில் 183 வது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த எல்லைப் பகுதியில் கடந்த நான்கு தினங்களாக ஆளில்லா விமானத்தை இடைமறித்து சுட்டு வீழ்த்திய மூன்றாவது சம்பவமாகும் இது.
இரண்டு கிலோ எடையுள்ள இரண்டு போதை பொருள் பாக்கெட்டுகள் ட்ரோணுடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் பேசும்போது பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்களில் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு இது ஒரு புதிய சவால் நேற்று இரவு நமது ராணுவ வீரர்கள் ஆளில்லா விமானத்தின் சத்தம் கேட்டு அதனை நோக்கி சுட்டுள்ளனர் அதன் பின் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது இரண்டு கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ட்ரோன் எடை சுமார் 12 கிலோ இருக்கும் என கூறியுள்ளனர் கடந்த 9 மாதங்களில் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் 191 ஆளில்லா விமானங்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். அதில் 171 ட்ரோன்கள் பஞ்சாப் செட்டியார் பகுதி வழியாகவும் 20 ட்ரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லா விமானங்கள் மூலமாக ஆயுதங்கள் வெடிபொருட்கள் மற்றும் போதை பொருள் இந்தியாவிற்குள் கடத்தப்படுகின்றது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே கேம்ப் அமைத்திருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஸ்கர் இதொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கிறது.