Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெடிவிபத்து… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தானில் உள்ள இராணுவத் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட்  நகரில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்திருக்கிறது. அந்த நாட்டில் உள்ள ராணுவ தளங்களை மிகவும் பழமையான மற்றும் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தீப்பற்றி எரிந்ததால் வான் உயரத்திற்கு கரும்புகை மண்டலம் எழுந்துள்ளது.

ராணுவத் தளத்திலிருந்து அடுத்தடுத்த வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாக அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் ராணுவ தளத்தில் தீப்பற்றி எரியும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த விபத்து குறித்த முழுமையான தகவல் வெளியாகாத நிலையில், ராணுவ தளத்தில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |