பாகிஸ்தான் நாட்டின் கடந்த ஜூன் மாதம் முதல் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சிந்த், பலுச்சிஸ்தான், கைபர் உள்ளிட்ட பல மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் 110 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் உணவு மற்றும் தங்கும் இடம் இன்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு, காய்கறி விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் நிதி மாதிரி இஸ்மாயில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெள்ளத்தால் நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயிர்கள் சேதமாகி மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் இந்தியாவுடன் வர்த்தக உறவை குறைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.