பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் குவெட்டா கூட்டு சாலை பகுதியில் நேற்று இரவு கையடி குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் அலங்கார பொருட்களை சாலையோர கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடை மீது கையடி குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் காயம் அடைந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் பற்றி இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.