பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை துணை சபாநாயகர் நிராகரித்தது, பிரதமரின் பரிந்துரை அடிப்படையில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது பற்றிய பிரச்சினையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் அமர்வு நடத்தியது. அப்போது பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம் குறித்த வெளிநாட்டு சதி தொடர்பாக மேலும் அறிவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து இன்று நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்தியில் 90 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு உகந்த தேதிகளை பரிந்துரைக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து அவர் தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி நேற்று கடிதம் எழுதினார். எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதும் பாகிஸ்தானில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.