பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஷபாஷ் ஷெரிஃப்தான் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத இம்ரான்கான் ஆதரவாளர்கள் அகமதாபாத், கராச்சி உள்ளிட்ட இடங்களில் அலைகடலென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முக்கிய நகரங்கள் பல மக்கள் வெள்ளத்தால் முடங்கியது. பாகிஸ்தான் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகதின் துபாயிலும் இம்ரான் கான் தான் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டுமென மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.