ஒழுக்கக்கேடான மற்றும் அனாகரிகமான வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மீண்டும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் இந்த செயலியில் அவ்வப்போது வெளியாகும் வீடியோக்கள் ஒழுக்கக்கேடான மற்றும் நாகரிகமுறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு தடை விதித்திருந்தது.
அதேபோல் பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலியில் வரும் காணொளிகள் போதைப் பழக்கத்தையும், ஆபாசமாகவும், ஆயுதக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒன்றாக உள்ளது எனக்கூறி தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி டிக்டாக் மீது விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெற்ற பெற்றிருந்த நிலையில் மீண்டும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மூன்றாவது முறையாக டிக் டாக் செயலி தடை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.