Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு… அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்…!!!!!!

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இல்லாமல் இருக்கின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகின்றது. மேலும் தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் வெள்ள பாதிப்பிற்கு 2.87 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து இருக்கின்றது. கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 6.62 லட்சம் வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்திருக்கின்றன என கூறியுள்ளது.

இதனால் மொத்தம் 9.49 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்துபோன நிலையிலும் காணப்படுகின்றது என கூறியுள்ளது. மேலும் பாகிஸ்தானில் 3,451.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் சேதமடைந்து இருக்கிறது 149 பாலங்கள் இடிந்து போயிருக்கின்றது. இந்த நிலையில் சாலைகளும் மற்றும் பாலங்களும் சேதம் அடைந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி செல்ல முடியாத சூழலில் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.  அவசர தேவைக்கான சுகாதார நலன், காய்கறி சந்தைகள் அல்லது பிற முக்கிய சேவைகளை தேடி செல்வதற்கும் உதவி தேவையானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கான வசதிகளும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன என தெரிய வந்திருக்கின்றது.

இந்த நிலையில் அந்த நாட்டின் தொடர்ந்து மீட்பு நிவாரணம் மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெள்ள பாதிப்புகளால் உருக்குலைந்து போன நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நன்கொடைகளை அளிக்கும்படி ஆளுமரசு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. வெள்ள பாதிப்புகளை முன்னிட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்கு அனைத்து கட்சி கூட்டம் ஒன்றையும் இன்று நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதன்படி அனைத்து மாகாண முதல் மந்திரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என அந்த நாட்டிற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி மரியும் அவுரங்கசீப் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் ஆயுதப்படைகளின் தலைமையும் கலந்து கொள்ளும் என கூறப்படுகின்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |