Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து கைதான இந்திய வாலிபர்….. வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்…!!!!

பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் இவர் பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களையும் சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் நாட்டின் உளவு பிரிவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜிதேந்தர் சிங்கை கைது செய்து 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜிதேந்தர் சிங் முகநூல் மூலமாக பழகிய ஒரு பெண் கூறியதால், இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் மேலும் அந்தப் பெண் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து இந்திய ராணுவம் குறித்த சில புகைப்படங்கள் மற்றும் விவரங்களை அனுப்பி வைக்க சொன்னதாகவும் தெரிகிறது.

அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை ஜிதேந்தர் சிங் பூஜாஜி என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த எண்ணுக்கு பல தகவல்களை அனுப்பியதுடன் அந்த தகவல்கள் அனைத்தையும் அவர் செல்போனில் இருந்து அழித்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து அவர் யார் யாரிடம் பேசி வந்துள்ளார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் போலீசார் ஜாலிமொகல்லாவில் ஜிதேந்தர்சிங் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தனர் அப்போது வீட்டில் இருந்து ராணுவ வீரர் சீருடை, சிம்கார்டுகள் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |