Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இதை வாங்க தடை…. நிதி மந்திரி அறிவிப்பு…!!!!!!!

 

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளை அந்த நாடு எதிர் கொண்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த உதவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதற்காக அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதை தடைசெய்யும் எனவும் பாகிஸ்தான் நிதி மந்திரி இஸ்மாயில்  கூறியுள்ளார்.

மேலும் ஜூலையில் தொடங்கும் 2022 – 23ம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை வெளியிட்ட இஸ்மாயில்  பணக்காரர்களுக்கான வரிகளை உயர்த்துவதாக கார்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாகவும் அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதை தடை செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளோம். ஆனால் கடினமான முடிவுகளை எடுப்பது இது முடிவு அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |