Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் உளவாளிகளுடன் நடிகர்களுக்கு தொடர்பு… தயாராகும் பெயர் பட்டியல்….!!

பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் பாலிவுட் நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் உளவாளிகள் 15 முதல் 20 வரை பாலிவுட்டில் ஊடுருவியுள்ளனர். அங்கு இருக்கின்ற பிரபலங்கள் இந்த உளவாளிகளுடன் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த உளவாளிகள் பாகிஸ்தானின்  புலனாய்வு அமைப்புடன்  நெருக்கமாக உள்ளதாக அதிகாரிகளிடமிருந்து தகவல்  வந்த போதிலும் பிரபலங்கள் அவர்களுடனான நெருக்கத்தை கைவிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பாலிவுட் நட்சத்திரங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் சில தனிநபர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கின்றனர்.
இந்திய ஏஜென்சிகள் பாலிவுட் நடிகர்களிடம்  வட அமெரிக்காவில் செயல்படும் 15 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் பற்றி கூறியிருந்தது. இந்த பாகிஸ்தானிய நபர்களைப் பற்றி பாலிவுட் நட்சத்திரங்கள் எச்சரிக்கையாக இருந்தன, ஆனாலும் அவர்கள் எச்சரிக்கைகளை புறக்கணிக்க முடிவு செய்து அவர்களுடன் ரகசிய தொடர்பில் தற்போது இருக்கின்றனர். இத்தகைய உளவாளிகள் அதிகரித்து வருவதால் அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகள் மீண்டும் பாகிஸ்தான் உளவு அமைப்புடன்  தொடர்பு கொண்டவர்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் செயலில் உள்ளவர்கள்  பட்டியலைத் தயார் செய்து வருகிறது.

Categories

Tech |