பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த இரண்டு நபர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டத்தில் இருக்கின்ற இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இன்று காலை டால் முகாம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு நபர்கள் சுற்றித் திரிவதை பாதுகாப்பு படையினர் கண்டுள்ளனர்.
அதனால் சுதாகரித்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள், அந்த இரண்டு நபர்களையும் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்னர் இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.