பாகிஸ்தானின் பிரதமரான நவாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய அவர் நம் நாடு கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்க்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையிலான புதிய மந்திரி சபையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் நவாஸ் பாகிஸ்தான் கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும் பேசிய அவர் கடனில் மூழ்கும் படகை நாம் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.