Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: குல்சார் அகமது இடைக்கால பிரதமராக பதவியேற்பா?…. லீக்கான தகவல்…..!!!!!

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்தநாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குல்சார்அகமதை நியமிக்க தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்து விட்டார். இதையடுத்து இம்ரான்கானின் பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்தநாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 90 தினங்களில் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பின் அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு நாடாளுமன்றம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரையிலும் இம்ரான்கான் தற்காலிக பிரதமராக இருப்பார் என தகவல்கள் தெரிவித்தன. அதே சமயம் நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார்அகமதுவை இடைக் கால பிரதமராக நியமிக்குமாறு அதிபர் ஆரிஃப் அகமதுக்கு இம்ரான்கான் இன்று பரிந்துரை செய்துள்ளார். ஆகவே பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இடைக் கால பிரதமரை நியமிக்க பாகிஸ்தானின் அதிபருக்கு அரசமைப்புச்சட்டம் அதிகாரம் வழங்கி இருக்கிறது. அவ்வாறு குல்சார்அகமது இடைக் கால பிரதமராக நியமிக்கப்பட்டால் அவர் முறைப்படி பதவியேற்கும் வரையிலும் பிரதமர் பதவியில் இம்ரான்கான் நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |