Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனல் நிருபர்… விபத்தில் சிக்கி பலி… பெரும் சோகம்..!!!!

பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஏ ஆர் ஒய் நியூஸ் என்னும் சேனல் விளங்குகிறது. இந்த சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிருபராகவும் பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப் இருப்பினும் அவர் அதிலிருந்து விலகி அதன்பின் துபாய்க்கு சென்று இருக்கின்றார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அவர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

இதனை அடுத்து கென்யா நாட்டின் தலைநகர் ஐரோப்பியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கின்றார். இது பற்றி கென்யா  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது மறைவை அர்ஷத்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதி செய்திருக்கின்றனர். அவரது மறைவுக்குப் பின் பி எம் எல் என் கட்சித் தலைவர் ஹீனா பெர்வாயிஸ் பட் இரங்கல் தெரிவித்திருக்கிறார். PTI கட்சியைச் சேர்ந்த அலிஜைதி மற்றும் ஏ ஆர் ஒய் சேனல் குழுமத்தின் உரிமையாளர் சல்மான் இக்பால் போன்றோரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |