இந்தியா தன்னுடைய ஏவுகணை தாக்குதலை, பாகிஸ்தான் பகுதிகள் மீது நடத்தும் வீடியோ வெளியாகின.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் ஊடுருவ செய்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று எண்ணிய நம் நாடு, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே இருக்கும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த தாக்குதல், பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஜோரி பகுதியில் இருந்தும், 25ம் தேதி தாங்தர் பகுதியில் இருந்தும் நிகழ்த்தப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முயற்சித்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
#WATCH Indian Army Sources: Army troops recently used anti-tank guided missiles & artillery shells to target Pakistan Army positions opposite the Kupwara sector. This was in response to frequent ceasefire violations by Pakistan to push infiltrators into Indian territory in J&K. pic.twitter.com/oHuglG0iQL
— ANI (@ANI) March 5, 2020