இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை இம்ரான்கான் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் இம்ரான்கான் இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக ரஷ்ய அதிபர் புடினை பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல்முறை ஆகும். அதேபோல் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இம்ரான்கானின் இந்த பயணமானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.