பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்படி இன்று நள்ளிரவு 1:30 மணி அளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. 342 உறுப்பினர்களை உடைய நாடாளுமன்றம் அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் வாயிலாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அவ்வாறு எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்து விட்டது. நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். அதாவது இம்ரான்கானை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிஅந்நாட்டு நாடாளுமன்றமானது உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றமானது நாளை கூடுகிறது. முன்பாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று அதிகாலையில் தேசிய சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. முக்கியமான அமர்வுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் அயாஸ் சாதிக், புதிய பிரதமருக்கான வேட்பு மனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். நாளை காலை 11 மணிக்கு அமர்வை கூட்டியுள்ளஅவர், அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்தார். இருந்தாலும் மதியம் 2 மணிக்கு சபைகூடும் என பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ட்விட்டர் பதிவில் “தேசிய சட்டமன்றக் கூட்டம் ஏப்ரல் 11 நாளை காலை 11:00 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2:00 மணிக்கு மீண்டும் கூடும்” என அதில் தெரிவித்து இருந்தது.
பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரையிலும் எந்த பிரதமரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் வாயிலாக பதவி பறிக்கப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக அவரது தலைவிதி முடிவு செய்யப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்கான் ஆவார். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பாகிஸ்தானிய பிரதமரும் இதுவரையிலும் ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக முடித்ததில்லை. இதனிடையில் இம்ரான் கான் வாக்கெடுப்பு நடைபெறும் போது கீழ் அவையில் இல்லை. வாக்கெடுப்பின் போது அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புசெய்தனர். எனினும் அந்த கட்சியின் அதிருப்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர். இம்ரான்கானின் நீக்கம், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை உருவாக்கி இருக்கிறது. இதற்கிடையே நாடாளுமன்றம் எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரிப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லீம்லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் ஷெரிப் விரைவில் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.