பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதில்மிகவும் மோசமாக டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பானது நேற்று 200ஆக சரிந்துவிட்டது. இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன் முறையாகும்.
இவ்வாறு ரூபாய் மதிப்பானது தொடர்ச்சியாக வீழ்ந்து வருவது அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல பில்லியன்டாலர் கடன் திட்டத்தினை புத்துஉயிர் பெறுவதற்காக தோஹாவிலுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் மீண்டுமாக பேச்சு வார்த்தை நடத்துவதால் உள்ளூர் நாணயம் அதன் சரிவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.