Categories
தேசிய செய்திகள்

‘பாகிஸ்தான் வாழ்க’ கோஷமிட்ட மாணவி…… ஆப்பு வைத்த நீதிமன்றம் …!!

ஓவைசி தலைமையில் நடத்தப்பட்ட CAA எதிர்ப்பு கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்ட மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவி மீது 124ஏ பிரிவின் கீழ்  தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜாமீன் கோரிய மாணவியின் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |