பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இவருடைய கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க- வினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க சார்பாக நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது அதில் பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொடுப்பவர்களுக்கு நான் ₹2 கோடி பரிசு கொடுப்பேன்” என அறிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் நன்கு அறிந்து தான் அவ்வாறு பேசியதாகவும், தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.