ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜமௌலி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மகேஷ் பாபு, ‘ராஜமௌலி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அனைத்து இந்திய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. 2022-ஆம் ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பை ராஜமௌலி வெளியிடுவார்’ என கூறியுள்ளார்.