Categories
சினிமா

பாகுபலி கட்டப்பா போல் நன்றி சொன்ன நடிகை காஜல் அகர்வால்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக காஜல் அகர்வால் இருக்கிறார். நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு பின் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் பிறகு, மாற்றான், துப்பாக்கி, மாரி ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இப்போது இவர் இந்தியன் -2 படத்தில் நடிக்க இருக்கிறார். தொழிலதிபர் கவுதம்கிச்சலுவை திருமணம் செய்த காஜல் அகர்வாலுக்கு அண்மையில் நீல் எனும் ஆண்குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பாகுபலி கட்டப்பா பாணியில் இயக்குனர் ராஜ மவுலிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காஜல் அகர்வால் தன் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகுபலிக்கு தான் அடிமை என்பதை குறிக்கும் விதமாக கட்டப்பா, பாகுபலியின் காலை தனது தலையில் வைப்பார். அதேபோன்று தனது குழந்தையின் காலை காஜல் அகர்வால் தன் தலைமீது வைத்து ” ராஜ மவுலி சார்.. இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு ஆகும். நாங்கள் எப்படி முடியாது என சொல்ல முடியும்” என குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Categories

Tech |