Categories
சினிமா தமிழ் சினிமா

பாகுபலி, கே.ஜி.எப் பாணியில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ரீத்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கினார். இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வந்தபோது சில பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

Dhruva Natchathiram Movie - Trailer, Star Cast, Release Date | Paytm.com

இதன்பின் கடந்த 2020-ல் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் துருவ நட்சத்திரம் 4½ மணி நேரம் ஓடக்கூடிய  படமாக உருவாகியுள்ளது. இதனால் பாகுபலி, கே.ஜி.எப் பாணியில் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |