பாகுபலி வெப் தொடரில் இளம் வயது சிவகாமி தேவியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக இருக்கிறது. 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரை ரூ.200 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பாகுபலி கதையில் வரும் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளவயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்படவுள்ளது . இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நடிகை சமந்தா பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் பிரபல நடிகை வாமிகா கபியை சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.