Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ வெளியாகி 6 வருஷம் ஆயிடுச்சு… பிரபாஸின் வைரல் டுவீட்… செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

பாகுபலி திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. இந்த பிரம்மாண்ட படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இன்றுடன் பாகுபலி திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை படக்குழுவினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து நடிகர் பிரபாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நாடு மற்றும் உலகம் முழுவதும் சினிமா மந்திர அலைகளை உருவாக்கிய குழுவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |