தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை படமாக இயக்கியுள்ளார். இது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்த பாசிட்டிவ்வான விமர்சனங்களை ரசிகர்கள் பலரும் தங்களுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் ஒரு youtube சேனலுக்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது, தமிழக வரலாற்றில் ராஜராஜ சோழன் மிகப்பெரிய மன்னன். இவரைப் பற்றிய பதிவு நேர்மையாக இருக்க வேண்டும். அதனால்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்துள்ளோம். வந்திய தேவனின் பார்வையில் விரிவடையும் கதை முழுவதுமாக நம்பும்படி கடந்த காலத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். இந்த படத்தில் பாகுபலி போன்ற பிரம்மாண்டங்களும் ஃபேன்டசிகளும் இல்லை. மேலும் பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டுமே வரலாற்று படங்களாக இருப்பினும் வேறு வேறானவை என்று கூறினார்.