Categories
தேசிய செய்திகள்

பாகுபாடில்லாமல் தாக்கும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு தொற்று உறுதி…!!

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வரும் நிலையில், வயது வித்தியாசம் எதுவும்  இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. மேலும் இந்த மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5,000க்கும் மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை இந்த வைரஸ் தனது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தனக்கு கொரோனா தொற்று இருப்பதை ஸ்ரீராமுலு டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று எனக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |