Categories
மாநில செய்திகள்

பாகுபாடு இன்றி நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்…!!!

பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும்.

தாய் அல்லது தந்தை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் தந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இவை அனைத்தும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் பெற்றோர்களின் வேலையை அளவுகோலாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் பெற்றோர்களின் வேலையை அளவுகோலாக எடுத்துக்கொள்ளாமல் கொரோனாவால் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும், நிவாரண உதவி வழங்க வேண்டும். அரசின் புதிய விதிகள் குழந்தைகளுக்கு இடையே பாகுபாடு உருவாக்குவதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |