Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமியில் இன்று பல டுவிஸ்ட்டுகள்….. ஷாக்கில் உறைந்து போன கோபி….!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி பிரபலமான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகன் கோபி தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் தொடர்பில் உள்ளார். ஆனால் கதாநாயகி பாக்கியலட்சுமிக்கு இது பற்றி உண்மைகள் எதுவும் தெரியாது. இந்நிலையில் கோபிக்கு ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது மனைவி என்று ராதிகா பில் கட்டியுள்ளார். இதனை பார்த்த பாக்யா அதிர்ச்சி அடைந்து போனார். இந்நிலையில் இன்று கோபி டிஸ்சார்ச் ஆகி வீட்டுக்கு வருகிறார். இவ்வளவு நாளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஏகப்பட்ட டுவிஸ்ட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது பாக்கியா கோபி, ராதிகா உறவை பற்றி குடும்பத்தாரிடம் சொல்கிறார். கோபியை கைநீட்டி கேள்வியும் கேட்கிறார். பதில் இல்லாமல் கோபி முழிக்கிறார்.

அது மட்டுமில்லாமல் எழிலும் இன்னொரு அதிர்ச்சியை தருகிறார். அதாவது அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது பற்றி தனக்கு முன்பே தெரியும் என்று கூறுகிறார். இதனை கேட்டு பாக்கியா கண்ணீரில் நனைகிறார். கோபிக்கும் எழில் சொன்னது இடி விழுந்தது போல் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து எழில் மட்டுமில்லாமல் ராமமூர்த்தி தாத்தா அதாவது கோபியின் அப்பாவும் எல்லா உண்மைகளையும் சொல்கிறார். கோபி விஷயம் தெரிந்த முதல் நபர் அவர்தான். மருமகள் மற்றும் குடும்ப நலனுக்காக இத்தனை நாளாக கோபியை பற்றி சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இப்போது எல்லாம் உண்மையும் தெரிந்து விட்டது என்பதால் அவரும் வாய் திறந்து பேசுகிறார். ஆக மொத்தம் இன்றைய எபிசோடு பாக்கியா எழில் ராமமூர்த்தி தாத்தா மூவரும் கோபியை பிழிந்து எடுக்கின்றனர். இது எல்லாவற்றுக்கும் கோபி என்ன பதில் சொல்ல போகிறார் என்பது ரசிகர்களுக்கு மிக பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

Categories

Tech |