பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகை சுசித்ரா இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் சதீஷ்குமார், விஷால், ரித்திகா, நேகா மேனன், திவ்யா கணேசன், ஜெனிபர், வேலு லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் 250 எபிசோடுகளை கடந்து மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இனி ராதிகாவாக.. 🙂
பாக்கியலட்சுமி – திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/rFjUnjtf5l
— Vijay Television (@vijaytelevision) July 5, 2021
இந்நிலையில் இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ரேஷ்மா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது புதிய புரோமோ மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ராதிகாவின் மகளாக ‘மயூரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த குழந்தையும் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.