Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல்: கோபிக்கு வரும் அடுத்தடுத்து சோதனை…. இன்றைய எபிசோடு இதோ உங்களுக்காக….!!!!

தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி தனியாக உட்கார்ந்து இருக்க, என்ன எல்லோரும் தூக்கிட்டாங்களா..? என்று கேட்கின்றனர். அதற்கு ஆமா நான் என்ன புது மாப்பிள்ளையா..? பழைய மாப்பிள்ளை தானே என அவர் புலம்புகிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணனும் கோபியிடம் வந்து பேசுகின்றனர்‌. அதாவது, உங்க வீட்ல இருக்கிறவங்க மண்டபத்துல அப்படி பிரச்சினை பண்ணது கொஞ்சம்கூட சரியில்லை என அவர்கள் கூற, கோபி அதற்கு மன்னிப்பு கேட்கிறார். மயூவை உங்களுடைய பொண்ணு மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். இனி நீங்க, ராதிகா, மயூரா மட்டும்தான் குடும்பம். வேற யாரும் கிடையாது. உங்களுக்கு 2 குடும்பம் எல்லாம் இல்ல, ஒரே குடும்பம் தான்.

வேற யாரை பற்றியும் நினைக்ககூடாது என அவர்கள் கூறும்போது கோபி அதிர்ச்சியடைந்து எதுவும் சொல்ல முடியாமல் தலையாட்டிக்கொள்கிறார். அதன்பின் கோபி முதலிரவு அறையில் பாட்டு பாடிக்கொண்டு தயாராக இருக்க, மற்றொரு பக்கம் ராதிகாவின் அண்ணி அவளை தயார்செய்து கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா நடந்ததெல்லாம் நடந்துபோச்சு இனி நீ வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும் என்று மகளிடம் கூறுகிறார். இதற்கிடையில் மயூ வேற நான் அம்மாவோடதான் தூங்குவேன் என அழைக்க ராதிகாவின் அம்மா அவளை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார். பின் ராதிகா ரூமுக்கு போனதும் கோபி உற்சாகமாக அவளை உள்ளே உட்கார வைத்து, எவ்வளவு அழகா இருக்க தெரியுமா, கல்யாணம் ரிசப்ஷன் என எல்லா இடத்திலும் ரொம்ப அழகா இருந்த, ஆனா அதை சொல்ல கூச்சமா இருந்துச்சு என்று சொல்லிக்கிட்டு நெருங்கிபோக ராதிகா ஓ என அழுகிறார்.

இதனால் உடனே என்ன ஆச்சு என கோபி கேட்க ராதிகா கல்யாணத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு என்று கூறுகிறார். அதே நேரம் இந்த பக்கம் பாக்கியா எழிலிடம் கொடைக்கானலில் பள்ளி படிப்பை படித்த விஷயத்தையும், அப்போது அப்பா இறந்துவிட எல்லாம் தலைகீழான மாறிய கதையையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதன்பின் உறங்குவதற்காக இனியா ரூமுக்கு செல்கிறார். இனியா இங்கே உறங்குமாறு பாக்கியா சொல்கிறார். அதற்கு பாக்யாவிடம் ஒரு நிமிஷம் என் பிரண்டுகிட்ட பேசிட்டு வந்துருறேன் என கூறி போனை எடுத்துக் கொண்டு இனியா கீழே வருகிறார். அதே சமயம் கோபி ராதிகாவை சமாதானப்படுத்தி முதல் இரவுக்காக நெருங்கி போகிறார். அப்போது இனியா, கோபிக்கு போன் செய்தார்.

உடனே கோபி போன் எடுத்துக்கொண்டு கீழே வந்து பேசுகிறார். இந்நிலையில் இனியா, நீங்க இப்படி பண்ணுவிங்கனு நான் எதிர்பார்க்கல. இனி நீங்க எனக்கு வேண்டாம். ஐ ஹேட்யூ என்று சொல்லி போனை வைக்க கோபி அதிர்ச்சியடைகிறார். இதனிடையில் கோபி இனியாவிடம் போனில் பேசுவதை பார்த்த ராதிகாவின் அம்மா இனி இதெல்லாம் இருக்கக் கூடாது. இதனால் அவரை கண்ட்ரோல்பண்ற வழியபாரு என்று ராதிகாவை எச்சரிக்கிறார். அடுத்து ரூமுக்கு போன கோபி இனியாதான் போன் பண்ணா, என்ன ரொம்ப மிஸ் பண்றா என வருத்தமாக கூறினார். ஒரு பைவ் மினிட்ஸ் ப்ரஷ் ஆயிட்டு வரேன் என கோபி பாத்ரூம் செல்ல, அதற்குள் மயூ எனக்கு தூக்கம் வரவில்லை என ராதிகாவின் பக்கத்தில் வந்து படுத்து கொள்கிறார். பின் பாத்ரூமில் இருந்து வந்த கோபி ராதிகாவுடன் மயூ இருப்பதை பார்த்து பல்பு வாங்குகிறார். இதனுடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Categories

Tech |